Skip to content

செல்போன் திருடன் கைது… போதை மாத்திரை விற்பன-திருச்சி க்ரைம்

செல்போன் திருடன் கைது

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சேர்ந்தவர் அரவிந்த் (வயது 32) இவர் பஞ்சப்பூர் பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த ஒரு வாலிபர் அரவிந்தன் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை திருடி கொண்டு ஓடினார்.இது குறித்து அரவிந்த் எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பேருந்து முளையம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்த போதுஅவர் பெயர் ராஜா (32) திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ராஜாவை கைது செய்து செல்போனை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

அதிக மாத்திரை சாப்பிட்ட முதியவர் சாவு

திருச்சி திருவரங்கம் திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் ஆச்சிமுத்து (வயது 20)இவர் வீட்டில் அதிக நீரிழிவு நோய் மாத்திரை சாப்பிட்டு மயங்கிடந்தார். இதையடுத்து அவரை ஆபத்தான நிலையில் திருவரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆச்சிமுத்து பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது

திருச்சி தேவதானபுரம் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேல் தலைமையில் போலீசார் தேவதான பகுதியில் சோதனை நடத்தினர். அப்பொழுது அங்கு சந்தேகத்திற்கு கிடமாக அங்கு மூன்று வாலிபர்கள் நின்று கொண்டுஇருந்தனர்.அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள், விசாரணையில் தாராநல்லூர் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் ( 24) தேவதானபுரம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (18) சின்ன கடை வீதி பகுதியை சேர்ந்த விக்னேஷ் ( 26) என்பது தெரிய வந்தது.மேலும் இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்தபோது அவர்கள் போதை மாத்திரை விற்றது தெரிய வந்தது. இதையடுத்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து போதை மாத்திரை மற்றும் ஊசிகள், டூவீலரை பறிமுதல் செய்தனர்.

தில்லை நகரில் அனுமதி என்று மது பாட்டில் பெற்றவர் கைது திருச்சி ஆகஸ்ட் 16 திருச்சி தென்னூர் ஆழ்வார்தோப்பு பகுதியில் சுதந்திர தினமான நேற்று மதுக்கடைகள் விடுமுறை நாளில் மது விற்பனை நடைபெற்று வருவதாக போலீசா இருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் ஆழ்வார்தோப்பு பகுதியில் சோதனை செய்தனர் அப்பொழுது அங்கு நின்ற தென்னூர் பகுதியை சேர்ந்த மாலிக் பாஷா வயது 24 என்பவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது இதை எடுத்து போலீசார் அவரிடம் இருந்து ஏராளமான மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்ல முயன்ற பயணி கைது

திருச்சி ஏர்போட்டில் நேற்று மலேசியா செல்லும் பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த துரைப்பாண்டி (47) என்பவரின் பாஸ்போர்ட்டை வாங்கி அதிகாரி சோதனை செய்தபோது அது போலியானவை என தெரிய வந்தது . இதையடுத்து இமிகிரேஷன் அதிகாரி அருள்ஜோதி துரைப்பாண்டி மீது ஏர்போர்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து துரைப்பாண்டியை கைது செய்தனர். பிறகு அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

error: Content is protected !!