Skip to content

டிரைவரிடம் செல்போன் திருட்டு.. ஆசிரியர் தற்கொலை- திருச்சி க்ரைம்

வாலிபர் தற்கொலை.. போலீசார் விசாரணை
திருவண்ணாமலை பரயம்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (22 ). இவர் மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்து தனது உறவினர் ஒருவரின் பழக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் இவருக்கு நிதி நெருக்கடி காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்தார். கடந்த பழக்கடை அருகில் மரத்தில் விக்னேஷ் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து திருவரங்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய விக்னேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் பள்ளி ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை

திருச்சி கிராப்பட்டி பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் (50) இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நித்யாசேனா (43) இவரும் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சார்லஸ் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் சார்லஸ் கடந்த 8ந் தேதி வீட்டில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு

முயன்றுள்ளார். இதையடுத்து அவரை ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து சிகிச்சை பெற்று வந்த சார்லஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஆட்டோ டிரைவரிடம் செல்போன் திருட்டு.. 2 பேர் கைது

திருச்சி உறையூர் குழுமணி ரோடு சுப்பிரமணியநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 59) இவர் ஆட்டோ டிரைவர். கடந்த 2 ந்தேதி இவர் திருச்சி ஜங்ஷன் பகுதியில் பயணிகளை இறக்கி விட்டார். பின்னர் தனது செல்போனை எடுத்து பார்த்துக்கொண்டிருந்த பொழுது அந்த நேரத்தில் அங்கு இரண்டு மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிளில் வந்து செல்வம் வைத்திருந்த
செல்போனை திருடிக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து செல்வம் கண்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை செய்தபோது தீப நகர் பகுதியை சேர்ந்த கார்த்தி வயது 25 லூயிஸ் பிரிட்டோ வயது 19 5 பேரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

வெவ்வேறு சம்பவங்களில்

கஞ்சா விற்ற பெண் உள்பட மூன்று பேர் கைது

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த மில் காலனி பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 38 ) என்பவரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை
பறிமுதல் . இதே போன்று பொன்மலை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தங்கேஸ்வரி நகர் மாரியம்மன் கோவில் பகுதியில் கஞ்சா விற்க கொண்டிருந்த பாரதன் (வயது 30)என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதேபோன்று அரியமங்கலம் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த நிலோபர் நிஷா (வயது 22) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.பிறகு இவர்களில் நிலேபர் நிஷா மற்றும் பரதன் ஆகியோரை போலீசார் ஜாமினில் விடுதலை செய்தனர்.

போதை மாத்திரை விற்பனை செய்த ரவுடி உள்பட 4 பேர் கைது

திருச்சி பாலக்கரை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பெல்சி மைதானம் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக பாலக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது போதை மாத்திரை விற்பனை செய்து கொண்டிருந்த பாலக்கரை காஜாப்பேட்டை பசுமடம் பகுதியை சேர்ந்த ஜமால் முகமது செலர்ஷா (வயது 23)ஜமால் முகமது (வயது 24) குட்ஷெட் பகுதியை சேர்ந்த ஆரோக்கிய செல்வகுமார் (வயது 24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 48 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர். இவர்களில் முகமது செலர்ஷா
ரவுடி பட்டியலில் உள்ளார். இதேபோன்று குட்ஷெட் ரோடு பாலம் தெரு பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்த முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்த செபாஸ்டின் சுனில் (வயது 24) பிரித்திவிராஜ் (வயது 21) சதீஷ்குமார் (வயது 35)ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 100 மாத்திரைகளைபோலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

error: Content is protected !!