100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றும் ஒன்றிய பாஜக அரசுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அன்னை தெரெசா மகளிர் வளாகத்தில், மதி கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4,000 கோடி நிதியை ஒன்றிய அரசு தரவில்லை. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ரூ.4,000 கோடி பணம் ஒன்றிய அரசிடமிருந்து வரவில்லை, நிதியை விடுவிக்குமாறு 10 முதலமைச்சர் வலியுறுத்தி வருகிறார்.
100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம் தொடர்பாக முதலமைச்சர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்

