Skip to content

கரூர் பகுதியில் அச்சமின்றி வாக்களிக்க மத்திய ரிசர்வ் போலீஸ் விழிப்புணர்வு பேரணி

கரூர் நகரப் பகுதியில் சட்டமன்றத் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி மத்திய ரிசர்வ் போலீஸ் விழிப்புணர்வு பேரணி.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது.

பொதுமக்கள் அச்சமின்றி வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதையும், தேர்தல் நேரத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்க பாதுகாப்பு துறை தயாராக இருப்பதையும் உறுதி

செய்யும் விதமாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்ற வருகிறது.

இன்று கரூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் உதவி கமாண்டர் மீனா சிங் தலைமையில் 40க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் அடங்கிய CRPF வீரர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கரூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் தொடங்கிய பேரணி தின்னப்பா தியேட்டர், சர்ச் கார்னர், ஜவஹர் பஜார் வழியாக லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் நிறைவடைந்தது.

error: Content is protected !!