திருச்சி கோட்டை மேல சிந்தாமணி காவேரி பார்க் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி கவிதா ( 52) .இவர் காவேரி பார்க் பகுதியில் தனது வீட்டு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் இவரது கழுத்தில் கிடந்த இரண்டு பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து கவிதா கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் சப்-இன்ஸ்பெக்டர் வாசு வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.குடியிருப்பு பகுதியில் பட்டப் பகலில் 2 மர்ம நபர்கள் பெண்ணின் செயினை அறுத்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மளிகை கடையில் பூட்டை உடைத்து 1 லட்சம் பணம் கொள்ளை
திருச்சி சுப்பிரமணியபுரம் ரஞ்சிதபுரம் சூசை தெருவை சேர்ந்தவர் சௌந்தரபாண்டியன் (70). இவர் சுப்பிரமணியபுரம் ராஜா தெரு பகுதியில் பாண்டியன் மளிகை மற்றும் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் மீண்டும் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளேசென்று பார்த்தபோது கடையில் இருந்த ஒரு லட்சம் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சவுந்தரபாண்டியன் கே.கே.நகர் போலீசி புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருடியது தெரியவந்தது. விசாரணையில் அவர் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த அஜய் குமார் (வயது 19) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சியில் லாட்டரி, போதை மாத்திரைகள் – 12 பேர் அதிரடி கைது
திருச்சி மாநகரில் லாட்டரி சீட்டுகள், போதை மாத்திரைகள் அதிக அளவில் விற்கப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் திருவரங்கம், கோட்டை, காந்தி மார்க்கெட், பாலக்கரை, உறையூர், அரசு மருத்துவமனை, கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர் .இந்த அதிரடி சோதனையில் திருச்சி மாநகரில் லாட்டரி சீட்டுகள் விற்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர். இரண்டு வாகனங்கள், 4 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடமிருந்து 15,000 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் திருச்சி கே.கே.நகர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் அதிரடி வேட்டை நடத்தினர் .அங்கு ரேஸ்கோர்ஸ் சாலை சந்திப்பு பகுதியில் தமிழ்நாடு ஓட்டல் அருகே போதை மாத்திரைகள் விற்றதாக பிரிண்ஸ், ஆல்பின் ஆகிய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 60 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சொகுசு காரில் பெட்டி, பெட்டியாக மது பாட்டில்கள்.- வாலிபர் அதிரடியாக கைது
திருச்சி விமான நிலையம் பகுதியில் சொகுசு காரில் மது பாட்டில்கள் கடத்திச் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து மாநகர மதுவிலக்கு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் ஜேக்கப் தலைமையிலான போலீசார் ஏர்போர்ட் காவிரி நகர் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது காலி பிளாட் பகுதியில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அந்த காரை சோதித்து பார்த்தனர். அப்போது அந்த காரில் விதவிதமான மது பாட்டில்கள் பெட்டி பெட்டியாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .அப்போதுசொகுசு கார் மற்றும் செல்போன் மற்றும் ஒரு லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் அது பாட்டில்கள் கடத்திய திருச்சி விமான நிலையம் ஸ்டார் நகர் பகுதியைச் சேர்ந்த இதரயத்துல்லா என்ற வாலிபரையும் போலீசார் கைது செய்தனர்.
திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.18 லட்சம் கஞ்சா பறிமுதல்
தென்னக ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் அருள்ஜோதி உத்தரவின் பேரில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் பிரசாந்த் யாதவ்,உதவி ஆணையர் பிரமோத் நாயர் ஆகியோர் மேற்பார்வையில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை வெடிகுண்டு தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் குழுவினர் செல்வராஜா இளையராஜா இளையராஜா ஜெயவேல் பிரசாந்த் ஆகியோர் கொண்ட படை திருச்சி ரயில் நிலையத்தில் வரும் ரயில்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.அப்போது திருச்சி வழியாக வரும் ரயில்களில் சட்டவிரோதமான போதைப் பொருட்கள் கடத்தலுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கைகளில் அதிரடியாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது ஹவுரா – திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி ரயில் நிலையத்திற்கு 8 -வது நடைமேடைக்கு வந்தது.அப்போது போலீஸ் படை அதிரடியாக சோதனை நடத்தியது.சோதனையின் போது யாரும் உரிமை கோர வராத நான்கு ட்ராவல் பேக்குகள் கிடந்தது.அதைக் கைப்பற்றி போலீசார் சோதனை இட்டுப் பார்த்தனர்.அப்போது அந்தப் பேக்குகளில் 36 கிலோ எடை கொண்ட 18 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது.அவற்றை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.அடுத்து திருச்சி வரும் ரயில்களில் கஞ்சா கடத்தல் பொருட்கள் இருக்கிறதா? என போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சிகள் மாலை
சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி அரிஸ்டோ ரவுண்டானாவில் அவரது உருவ சிலைக்கு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
அருகில்மத்திய மாவட்ட செயலாளர்கள் வைரமணி,காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ.
மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், ஸ்டாலின் குமார் எம்.எல்.ஏ. மாவட்ட துணை செயலாளர் முத்து செல்வம்,
பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ்,
கமால் முஸ்தபா இளங்கோ, நிர்வாகிகள் துரைராஜ், குடமுருட்டி சேகர் உள்பட பலர் உள்ளனர்.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் சட்ட மேதை அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி அவரது உருவ சிலைக்கு திருச்சி இ.பி ரோட்டில் மாநகர திமுக செயலாளர் மதிவாணன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம்.அருகில் மாநில இலக்கிய அணி செந்தில் மாவட்ட நிர்வாகிகள் கோவிந்தராஜ், மூக்கன், குணசேகரன், பகுதி செயலாளர்கள் நீலமேகம், கொட்டப்பட்டு தர்மராஜ், ஏ.ம்.ஜி. விஜய்குமார், பாபு ,மணிவேல் சிவக்குமார், நிர்வாகிகள் மனோகர், சங்கர், சாதிக் பாட்ஷா,ரமேஷ்,முகேஷ் குமார் அலெக்ஸ் ராஜா உள்ளனர்.
சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு தினத்தை ஒட்டி திருச்சியில் அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட மதிமுக சார்பில் துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா தலைமையில் மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம்.அருகில் பகுதி செயலாளர்கள் ஜங்ஷன் செல்லத்துரை, ஆசிரியர் முருகன், கவுன்சிலர் அப்பீஸ் முத்துக்குமார்,பொன்மலைப்பட்டி கணேசன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.
சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 70-வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி,
அருகில் நிர்வாகிகள் பத்மநாதன், வக்கீல் ராஜ்குமார், ரஜினிகாந்த்,வெங்கட் பிரபு, அப்பாஸ்,பொன்னர், அன்பழகன்,நாகநாதர் பாண்டி,டிபன் கார்த்திகேயன், அப்பாக்குட்டி, வக்கீல் ஜெயராமன்,ரவீந்திரன், டைமன் தாமோதரன், தமிழரசி சுப்பையா, கேடி.அன்பு ரோஸ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சட்டமேதை அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல்.ரெக்ஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம் .அருகில் மாவட்ட பொருளாளர் முரளி, கோட்டத் தலைவர்கள் ராஜா டேனியல் ராய் ,பிரியங்கா பட்டேல், மாவட்ட நிர்வாகிகள் அருள், மகேஸ்வரன், கிளமெண்ட் சத்தியநாதன்,மாரீஸ்வரி உள்பட பலர் உள்ளனர்.
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி பிரிவு சார்பில் சட்ட மேதை அம்பேத்கர் சிலைக்கு மாநில பொதுச் செயலாளர் ஜங்ஷன் பூக்கடை பன்னீர்செல்வம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அருகில் மாநில செயலாளர் சுந்தர், சாத்தனூர் கனகராஜ், செல்லையன், மாநகர் மாவட்ட தலைவர் ரியாஸ், மாவட்ட துணை தலைவர் பால்சாமி, மாவட்ட செயலாளர்கள் மிளகுபாறை சங்கர் ,ஜங்ஷன் காந்தி ஆகியோர் உள்ளனர்.
சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு தினத்தை ஒட்டி அவரது உருவ சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், சக்தி, ஆற்றல் அரசு, வழக்கறிஞர் கலைச்செல்வன், குரு அன்புச்செல்வன் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம் .அருகில் மண்டல செயலாளர் தமிழாதன், திருச்சி பாராளுமன்ற தொகுதி செயலாளர் தங்கத்துரை, மாநில நிர்வாகிகள் அரசு, பெல். சந்திரசேகரன், கஸ்தூரி உள்பட பலர் உள்ளனர்.

