Skip to content

மூதாட்டியிடம் செயின் பறிப்பு… திருச்சி க்ரைம்

மூதாட்டியிடம் செயின் பறிப்பு

திருச்சி கே.கே.நகர் தென்றல் நகர் விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஒப்பாயி (65). பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் தன் வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது அவரது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் திடீரென அவரது கழுத்தில் இருந்த இரண்டு பவுன் மதிப்புள்ள தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து மூதாட்டியிடமிருந்து செயினை பறித்த அந்த இரண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி கொட்டப்பட்டு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள் (52 )தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு சுதா (46 )என்பவருடன் திருமணம் ஆகி 2 பெண் வாரிசுகள் உள்ளனர். பெருமாள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது .இந்த நிலையில் நேற்று பெருமாள் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் தற்கொலைக்கான காரணம் குறித்து பொன்மலை போலீஸ் சார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மலேசியா நாட்டு மூதாட்டி மூச்சு திணறி சாவு

மலேசியா, ரஹாங் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் மனைவி வசந்தா (85). இவர் மலேசியாவில் குடியுரிமை பெற்று அங்கு வாழ்ந்து வருகிறார். இவர் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வசந்தா மலேசியாவில் இருந்து பரிகார பூஜைக்காக தஞ்சாவூர் வந்தார். பின்னர் திருச்சி கோட்டை பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் அறை தங்கி இருந்தார் அங்கு வசந்தாவிற்கு நேற்று திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. அவரை உடனடியாக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வசந்தா இருந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

துப்புரவு பணியாளர் மூச்சுத்திணறி பலி

திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி சேர்ந்தவர் சுலோச்சனா ( 52). இவர் தனியார் நிறுவனத்தில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார் இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சு சிகிச்சை அளிக்கப்பட்டது மேலும் அவர் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் இந்த நிலையில் சுலோச்சனா விற்கு தன் வீட்டில் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது உடனடியாக அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு டாக்டர்கள் சுலோச்சனா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர் இதுகுறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!