Skip to content

ஆகஸ்டில் இயல்பை விட அதிக மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் தகவல்..!!

  • by Authour

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் இயல்பைவிட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த ஜூன் 1ம் தேதி முதல்  தமிழநாடு மற்றும் புதுச்சேரியில் அவ்வப்போது தொடர்ந்து ஆங்காங்கே மழைபெய்து வருகிறது. இருப்பினும்  நேற்று (ஜூலை 27) வரையிலான நிலவரப்படி 10 செமீ மழை பதிவாகியுள்ளதாகவு, இது இயல்பைவிட 6 சதவீதம் குறைவு என்றும்  வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

அதேநேரம் இந்த மாதம்(ஜூலை) தமிழ்நாட்டில் பெரும்பாலான நாட்களில் வெப்பமான சூழலே நிலவியதால், மழைப்பதிவு குறைந்திருக்கிறது.  இருப்பினும் வரும் ஆகஸ்ட் மாதம்  தமிழ்நாட்டில் இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.  ஆகஸ்டின் முதல் 2 வாரங்களில் வெப்பச்சலன மழை தீவிரமாக இருக்கும் என்றும்,  ஆக,15ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில்  வடகடலோரம், வடக்கு உள் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்கள் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவடங்கள் என தமிழ்நாட்டில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பதிவாக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், ஆக.18 முதல் 31ம் தேதி வரையில் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்ட பகுதிகள், கேரளா, கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை திவிரம் அடைந்து காணப்படும் எனவும், ஒட்டுமொத்தமாக அடுத்த மாதம் இயல்பைவிட அதிக மழை பெய்யும் என்றும் கூறியுள்ளது. அதேநேரம் இயல்பான வெப்பமும் தமிநாட்டில் பதிவாகும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

error: Content is protected !!