தமிழ்நாட்டில் பகல் 1 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சென்னை ஆகிய மாவட்டங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழையும் பெய்துவருகிறது.
இந்நிலையில் இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மிக கனமழையும், தேனி, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
இந்தச்சூழலில் தமிழ்நாட்டில் பகல் 1 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதன்படி செங்கல்பட்டு, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, கோவை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.