தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக, வரும் 6 மற்றும் 7ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.சென்னையை பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

