தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் 27ம் தேதி வடசென்னை மற்றும் திருவள்ளூரில் பிரசாரம் செய்ய விஜய் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதனை மாற்றி சேலம் மற்றும் நாமக்கல்லில் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், வரும் 27ஆம் தேதி சேலம் மற்றும் நாமக்கல்லில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சேலத்திற்கு பதிலாக கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் காலை 11 மணியளவில் நாமக்கல் மாவட்டத்தில் விஜய் உரையாற்றுவார் எனவும் அதன்பிறகு கரூர் மாவட்டத்தில் மாலை 3 மணி அளவில் உரையாற்றுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.