Skip to content

திருச்சி காவல்துறையில் ஏசி க்கள், ஆய்வாளர்கள் மாற்றம்..

திருச்சி மாநகர காவல்துறையில் துணை ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சிலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி தில்லைநகர் காவல் உதவி ஆணையராக பணியாற்றி வந்த தங்கபாண்டியன் விழுப்புரம் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு டிஎஸ்பியாகவும்,, அரியலுôர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை டிஎஸ்பியாக பணியாற்றிய கென்னடி, திருச்சி கேகே நகர் உதவி ஆணையராகவும் (ஏசி) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டிஜிபி சங்கர் ஜிவால் செவ்வாய்க்கிழமை பிறப்பித்துள்ளார். மேலும், திருச்சி உறையூர் போலீஸ் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன், அரசு மருத்துவமனை காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார், பொன்மலை குற்றப்பிரிவு ஆய்வாளர் பேபி உமா ஆகியோர் மத்திய மண்டலத்துக்கும், திருவாரூர் மாவட்டம் எடையூர் காவல் நிலைய ஆய்வாளர் இம்மானுவேல், தஞ்சாவூர் மாவட்டம் பூதலுôர் காவல் நிலைய ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் திருச்சி மாநகர காவல் துறைக்கும், திருவாரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர் கார்த்திகா திருச்சி சரகத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை திருச்சி மத்திய மண்டல (ஐஜி) காவல்துறைத் தலைவர் ஜோஷிநிர்மல் குமார் பிறப்பித்துள்ளார்.
error: Content is protected !!