Skip to content

சட்டீஸ்கரில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

  • by Authour

 இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக சட்டீஸ்கர் உள்ளது. இம்மாநிலத்தில், நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சட்டீஸ்கர் மாநிலம் தெற்கு பிஜாப்பூர் மாவட்டத்தின் காடுகளில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில் 12 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.   பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும்  கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

இந்த மாதத்தில் பிஜாப்பூரில் நடக்கும் இரண்டாவது பெரிய என்கவுன்டர் சம்பவம் இதுவாகும். கடந்த  12ம் தேதி, மாவட்டத்தின் மட்டேட் காவல் நிலையப் பகுதியில் இதேபோன்ற நடவடிக்கையில் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து நக்சலைட்டுகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!