சென்னை சைதாப்பேட்டை வழியாகத் தள்ளாடியபடி டூவீலரை ஓட்டிவந்த இளம்பெண்ணை தடுத்து நிறுத்தி, பிரீத் அனலைசர் கருவி மூலம் போலீசார் சோதனை நடத்தியபோது அவர் அளவிற்கு அதிகமாக மது அருந்தியுள்ளது தெரியவந்தது. வேளச்சேரியைச் சேர்ந்த மீனா என்ற அந்த பெண்ணிற்கு போலீசார் அபராதம் விதித்தனர். தானே ஓசியில் குடித்துவிட்டு வருவதால் அபாரத தொகையையெல்லாம் செலுத்தமுடியாது என கத்தி ரகளை செய்த மீனா, தினமும் குடித்துவிட்டுதான் வாகனம் ஓட்டுவதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அப்பெண்ணின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து போலீசார், அவரை வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.
