Skip to content

சென்னை- இயற்கை ஓவியக் கண்காட்சியினை துவக்கி வைத்தார் நடிகர் சிவகுமார்

இயற்கை ஓவிய கண்காட்சியை துவக்கி வைத்தார் ஓவியக் கலைஞரும் நடிகருமான சிவக்குமார் சென்னையில் உள்ள லலித் கலா அகாடமியில் ஏழு நாட்கள் நடைபெறும் (சித்திர தேரோட்டம் என்ற தலைப்பில்) இயற்கை ஓவியக் கண்காட்சியினை பிரபல ஓவியரும், அன்னை காமாட்சி இசை கல்லூரியின் முதல்வரும் வெங்கடாசலபதி மற்றும் திரைப்பட நடிகரும் ஓவியக் கலைஞருமான சிவகுமார் துவக்கி வைத்தார்.

புகழ்பெற்ற ஓவியர்கள் வசுமதி, முருகேசன், அன்னபூர்ணா,ரங்கராஜன் கலைஞர்கள் வரைந்த

ஓவியங்கள் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியானது 22 ஆம் தேதி துவங்கி 28ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மா

லை 6 மணி வரை நடைபெறும் எனவும் , பொதுமக்கள் இதனை இலவசமாக பார்வையிடலாம்..

இதில் ஓவியர்கள் இந்தியாவின் கலாச்சாரம், பெருமைகள் பறைசாற்றும் விதமாக தமிழ்நாட்டில் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில், மகாகவி பாரதியார், டெல்லியில் உள்ள செங்கோட்டை, பூவிதழ்கள் மரங்கள் செடிகள் வெளியிட்டவற்றை , இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கலர் பெயிண்டுகள் வைத்து புகைப்படங்கள் வரையப்பட்டுள்ளது…

error: Content is protected !!