Skip to content

சென்னையில் கார் ரேஸ்….. முதல்வர்-துணை முதல்வருக்கு …. நடிகர் அஜித் பாராட்டு…

சென்னையில் இரவு நேர கார் பந்தயம் நடத்தியது வரவேற்கத்தக்கது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் அஜித்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். துபாயில் நடந்து முடிந்த 24ஹெச் சீரிஸ் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். அவரது சொந்த கார் ரேஸ் அணியான ‘அஜித்குமார் ரேஸிங்’ பெயரில் பங்கேற்ற அவர், இந்த போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்தார். துபாய் கார் ரேஸ் நிறைவுக்கு பிறகு யூடியூப் சேனல் ஒன்றிற்கு அஜித் அளித்த பேட்டி, தற்போது வெளியாகியுள்ளது.

அதில் அவர் கூறுகையில்; இரவுநேர கார் பந்தயத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி நடத்தியது வரவேற்கத்தக்கது. நமது நாட்டில் கார் பந்தயங்களுக்கு அது மிகவும் உந்துசக்தியாக அமைந்தது. சென்னையில் ஸ்ட்ரீட் கார் ரேஸ் நடத்தியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதிக்கு நன்றி. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் எனக்கு அளித்த ஆதரவுக்கும் நன்றி. இந்தியாவில் மோட்டார் ஸ்ட்போர்ஸ்-க்கு மிகப்பெரிய ஊக்கமாக அது இருந்தது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மோட்டார் ஸ்போர்ட்ஸ்க்கு நிறைய நல்ல விஷயங்ளை செய்து வருகிறது. வாழ்க்கையை ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள். கடினமாக உழையுங்கள், ரொம்ப Toxic-ஆக இருக்காதீர்கள். வாழ்க்கை மிக மிக குறுகியது அழகாக வாழ பாருங்கள். உங்களுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர்களை வெறுக்காதீர்கள் என்று கூறினார்.

error: Content is protected !!