சென்னை மெரீனா கடற்கரையில் 1923 ம் வருடம் மே மாதம், தொழிலாளர் உரிமைகளின் ஒப்புதலுக்காக உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இதுவே இந்தியாவில் மே தினத்தையொட்டி நடைபெற்ற முதல் கூட்டமாகும்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்வின் நினைவாகவும், கடற்கரையை அழகு படுத்தும் நோக்கிலும் jதமிழக முதல்வராக இருந்த பெருந்தலைவர் காமராஜர் மெரீனாவில் ஒரு சிலையை எழுப்ப உத்தரவிட்டு அதை 1959 ம் வருடம் ஜனவரி 25 அன்று ஆளுநர் விஷ்ணுராம் மேதியால் மூலம் திறந்தும் வைத்தார் !
இந்த வரலாற்று நிகழ்வை இந்திய மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சிவ ராஜசேகரன் MA BL MC தலைமையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து ஊர்வலமாக சென்று
(Triumph of Labour) மே தின நினைவாகவும் உழைப்பாளர்களைப் போற்றும் விதத்திலும் சென்னை மெரீனா கடற்கரையின் வடக்கே அண்ணா சதுக்கத்தில் அமையப்பெற்றுள்ள உழைப்பாளர் சிலைக்கு மலர்வளையம் வைத்தும் மலர்களை தூவியும் வீர வணக்கம் செலுத்தினர்
இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் , சர்க்கிள் தலைவர்கள் மற்றும் வட்ட தலைவர்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்