சென்னை ஆவடி அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடி எதிர்பாராத விதமாக வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சுனில் பிரகாஷ், யாசின் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நாட்டு வெடி வெடித்ததில் வீடு முழுவதும் கடுமையாக சேதமடைந்துள்ளது.
தகவல் அறிந்த ஆவடி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.