இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பகலிரவு போட்டியாக நடக்கிறது. மதியம் 1.3 மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. மாலையில் மழை பெய்வதற்கான வாய்ப்பு 40% இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் முதல் பேட்டிங் அந்த அணிக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
