Skip to content

குடியரசு தின விழாவில் அண்ணா பதக்கம் விருது வழங்கிய முதல்வர்

இந்தியாவின் 77-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னியில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். தொடர்ந்து குடியரசு தினத்தையொட்டி பல்வேறு பிரிவுகளில் பதக்கங்கள், விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

குடியரசு நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய விருதுகள்:
வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம்

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தீயணைப்புத்துறை ஓட்டுனர் சங்கர்

தீயணைப்பு துறையைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் ரமேஷ்

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த பீட்டர் ஜான்சன்

கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கலிமுல்லா

சிறந்த நெல் சாகுபடிக்கான நாராயணசாமி நாயுடு விருது

தஞ்சாவூரைச் சேர்ந்த வீரமணி

சிறந்த காவல் நிலையத்திற்கான விருது

முதல் பரிசு மதுரை மாநகரம்

இரண்டாவது பரிசு திருப்பூர் மாநகரம்

மூன்றாவது பரிசு கோயம்புத்தூர் மாவட்டம்

காந்தியடிகள் காவலர் பதக்கம்

விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் நடராஜன்

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சத்யாநந்தன்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன்

கடலூர் மாவட்டம் புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நடராஜன்

சேலம் மாவட்டம் மத்திய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் கண்ணன். ஆகிய விருதுகளை வழங்கினார்.

error: Content is protected !!