லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: அரியலூர் மாவட்டம் முழுக்க நேரடி ஒளிபரப்பு செய்து கண்டு இரசித்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.
தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவரும் ஆன திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘லண்டன் ஆக்ஸ்போர்டு’ பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைத்து “சுயமரியாத இயக்கம் மற்றும் அதன் மரபுகள்” எனும் தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.
ஆயிரம் ஆண்டுகளாக அறிவார்ந்த பலரின் கனவாக இருக்கும் ஆக்ஸ்போர்ட் அறிவாலயத்தில், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் கனவாக இருந்த சுயமரியாதை இயக்கத்தையும்- புரட்சியாளர் பெரியாரையும் போற்றுவதாக முதலமைச்சர் உரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியை காணொளி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் அமைப்பு ரீதியாக செயல்படும் திமுக ஒன்றிய கழகங்களில் மாவட்ட செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களது ஏற்பாட்டில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அரியலூர், திருமானூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை, தா.பழூர் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த திமுகவினரும், பொதுமக்களும் இந்த நேரலை நிகழ்ச்சியை காணொளி வாயிலாக கண்டு ரசித்தனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றிய பொதுமக்கள் மற்றும் திமுகவினரோடு போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சரும், அரியலூர் மாவட்ட திமுக செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர் நேரில் அமர்ந்து கண்டு ரசித்தார்.