Skip to content

வீரமங்கை ராணி வேலுநாச்சியார் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

வட இந்தியாவில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்த வீராங்கனை ஜான்சி ராணி வாழ்ந்த (கி.பி. 1835-1858) காலத்திற்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே, ஆங்கிலேயர்களை எதிர்த்த “முதல் இந்திய விடுதலைப் பெண் போராளி வீரமங்கை வேலுநாச்சியார் அவர்கள் 1796 டிசம்பர் 25 அன்று மறைந்து அழியாப் புகழ் பெற்றார்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி, தமிழ் மண்ணின் தலைசிறந்த வீராங்கனை வேலுநாச்சியாரின் வீரத்தினை வருங்காலத் தலைமுறையினர் அறிந்து போற்றிடும் வகையில், சென்னை. கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் ரூ50 லட்சம் மதிப்பீட்டில் வேலுநாச்சியார் திருவுருவச் சிலை நிறுவப்படும் என 2024-2025 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையின்போது சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 50 லட்சம் செலவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் திருவுருவச் சிலையினை தமிழ்நாடு முதல்-அமைச்சர் 19.9.2025 (இன்று) காலை 10.00 மணியளவில் திறந்து வைத்துச் சிறப்பித்தார்.
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
error: Content is protected !!