Skip to content

ஆக்ஸ்போர்டு பல்கலை.,யில் பெரியார் உருவப்படத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

  • by Authour

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்றைய தினம் (செப்டம்பர் 4) இரவு 10 மணி அளவில் இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் உருவப்படத்தைத் திறந்து வைத்தார். இந்நிகழ்வு சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு

விழாவைக் கொண்டாடும் வகையில் நடைபெற்றது.

இதனுடன், “The Dravidian Pathway” மற்றும் “The Cambridge Companion to Periyar” ஆகிய இரு நூல்களையும் அவர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், பெரியாரின் பகுத்தறிவு, சமூக நீதி, மற்றும் சுயமரியாதைக் கொள்கைகளை உலகளவில் பரப்புவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “தோட்டா தரணி அவர்களின் கைவண்ணத்தில் உருவாகி, Oxford-இல் பெரியாரின் பேரனாக நான் திறந்து வைத்துள்ள அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் உருவப் படம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!