Skip to content

வாலிபருக்கு அரிவாள் வெட்டு-3 பேர் கைது.. திருச்சி க்ரைம்…

வாலிபருக்கு அரிவாள் வெட்டு.. 3 பேர் கைது…  2 பேருக்கு வலை வீச்சு

திருச்சி திருவானைக்கோவில் கணேசபுரம் தோப்பைச் சேர்ந்தவர் பிரபாகரன் ( 26) இவர் கடந்த 13ஆம் தேதி திருவானைக்கோவில் நெல்சன் சாலை அருகே நடந்த ஊர் திருவிழாவில் கலந்து கொண்டார். அப்போது இவரது நண்பனான தினேஷ்குமார் என்பவரை ஸ்ரீரங்கம் புது காலனியைச் சேர்ந்த பூபதி ராஜா (19) பாரதி (20) சோனி பார்த்தா மற்றும் சிவக்குமார் ஆகிய நான்கு பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர் . இதுகுறித்து பிரபாகரன் கேட்ட போது இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அந்த நான்கு பேரும் பிரபாகரனை அந்த கோவில் திருவிழாவில் வைத்து கத்தியால் வெட்டி உள்ளனர் காயமடைந்த பிரபாகரன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து திருவரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து பூபதி, ராஜா மற்றும் பாரதியை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிவகுமார் மற்றும் சோனி பார்த்தவை தேடி வருகின்றனர்.

கணவன் தூக்கிட்டு தற்கொலை- மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் விபரிதம்

திருச்சி கே கே நகர் இந்திரா நகரை சேர்ந்தவர் மகேஸ்வரன் (51) இவரது மனைவி பரமேஸ்வரி (43. ) மகேஸ்வரனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் கடந்த 13 ந்தேதி பரமேஸ்வரி அவரை கண்டித்துள்ளார். இதைத்தொடர்ந்து மகேஸ்வரன் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கே கே நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஸ்ரீரங்கத்தில்  ஆட்டோ டிரைவர் தற்கொலை

திருச்சி திருவரங்கம் காந்தி சாலையை சேர்ந்தவர் ராஜேஷ் (40) ஆட்டோ டிரைவர் இவரது மனைவி லட்சுமி பிரியா (வயது32). இந்த நிலையில் ராஜேஷுக்கு ஆட்டோ ஓட்டுவதில் சரியான வருமானம் இல்லை என தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த அவர் கடந்த 13 ந்தேதி தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு  பதிவு விசாரனை செய்து வருகின்றனர்.

திருச்சியில் மாநகராட்சி பூங்கா காவலாளி சாவு

திருச்சி தென்னூர் வாமடம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (51) திருச்சி கேகே நகர் மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த பத்தாம் தேதி மது அருந்திவிட்டு வந்தபோது தன் வீட்டின் அருகே தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது இதையடுத்து விஜயகுமாரை மீட்டு திருச்சி அரசு  ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த நிலையில் நேற்று விஜயகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தில்லை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

திருச்சி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அடையாளம் தெரியாத முதியவர் சாவு

திருச்சி அரசு மருத்துவமனை குடியிருப்பு மருத்துவ அலுவலர் நந்தகுமார் நேற்று நரம்பியல் மருத்துவர் வளாகம் அருகே சென்றபோது அங்கு 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.இதனை பார்த்து பொதுமக்கள் அரசு மருத்துவமனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றிஇறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

காட்டூரில் விபத்து டூவீலரில் தவறி விழுந்து ஒருவர் சாவு

திருச்சி தெற்கு காட்டூர் கமலா நேரு நகரை சேர்ந்தவர் காஜா மொய்தீன் ( 52). இவர் கடந்த 13 ந்தேதி திருச்சி தஞ்சை நெடுஞ்சாலையில் டூவீரில் சென்று கொண்டிருந்தார் அப்பொழுது எஸ் ஐடி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது இருசக்கர வாகன கட்டுப்பட்டிருந்த அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த காஜா மொய்தீன் நேற்று உயிரிழந்தார் இது குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!