கோவை துடியலூர் அரவான் கோவில் திடல் பகுதியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 73 வது பிறந்தநாளை ஒட்டி திமுக 2 வது வட்டம் துடியலூர் கிழக்கு பகுதி சார்பில் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கியும் சிறப்பாக கொண்டாடினர். மேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி ஒவ்வொரு வீடுகளிலும் கோலங்களை வரைந்திருந்தனர். அவைகளை பார்வையிட்டு சிறந்த கோலங்களுக்கான பரிசு கூப்பன்களை வழங்கினர்.
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலினின் 73 வது பிறந்தநாளை திமுகவினர்

பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வெகு விமர்சையாக கொண்டாடிவருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திமுக 2 வது வட்டம் துடியலூர் கிழக்கு பகுதி சார்பில் கோவை துடியலூர் அரவான் கோவில் திடல் பகுதியில் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
2 வது வட்டக் கழக செயலாளர் தமிழ் நிதி மற்றும் 2 வது அ வட்டக் கழக செயலாளர் சிடிசி ராஜா ஆகியோரது ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு துடியலூர் கிழக்கு பகுதி கழக செயலாளர் அருள்குமார் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மு க ஸ்டாலின் உருவம் பொறித்த கேக் வெட்டி அதனை குழந்தைகளுக்கும், நிர்வாகிகளுக்கு ஊட்டினர். மேலும் பொதுமக்களுக்கும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அணி நிர்வாகிகள், பகுதி கழக

நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள், பி எல் ஏ 2, பி எல் சி நிர்வாகிகள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
தொடந்து துடியலூர் முத்துநகர், புது முத்து நகர் பகுதியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியும், ஸ்டாலினின் உருவத்தை வரைந்தும் ஒவ்வொரு வீடுகளிலும்

கோலங்களை வரைந்திருந்தனர். அவைகளை பார்வையிட்டு சிறந்த கோலங்களுக்கான பரிசு கூப்பன்களை வழங்கினர்.

