மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை ஜுடோ போட்டியில் அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி உடற்கல்வியியல் கல்லூரி மாணவன் முதலிடம். கல்லூரி மாணவர்களுக்காக நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை ஜூடோ போட்டியில் மீனாட்சி உடற்கல்வியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவன்
P. அஜித்குமார் முதலிடம் பெற்று ரூபாய் ஒரு இலட்சம் ரூபாய் பரிசினை வென்றார்.
ரூபாய் ஒரு இலட்சத்துடன் மாநில அளவில் முதல் பரிசை வென்று அரியலூர் மாவட்டத்திற்கும் தத்தனூர் மீனாட்சி இராமசாமி கல்லூரிக்கும் பெருமை சேர்த்த மாணவர் அஜீத்குமாருக்கு கல்வி நிறுவனங்களின் சேர்மன் M.R. இரகுநாதன், மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின்,
கல்லூரி இயக்குனர் டாக்டர் ஆர். இராஜமாணிக்கம், ஆலோசகர் டாக்டர். தங்க. பிச்சையப்பா கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தனர்.