Skip to content

கோவை-மதுரை மெட்ரோவுக்கு முதல்வர் தீவிர முயற்சி.. அமைச்சர் சிவசங்கர் தகவல்

அரியலூரில் நான்கு வழித்தடங்களில் கிராமப்புறங்களுக்கான புதிய பேருந்துகளை தொடங்கி வைத்த போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு செயல்படுத்த அனுமதி இல்லை என்று கூறியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவிக்கும் பாஜக அமைச்சர் 20 லட்சம் மக்கள் தொகை பயணம் இல்லை என்று கூறுகிறார். தமிழ்நாட்டில் உள்ள பாஜக தலைவர்களுக்கான வானதி சீனிவாசன் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோரோம்

வெவ்வேறு கருத்துக்களை கூறுகின்றனர். இவர்களிடையே ஒரு ஒருமித்த கருத்து இல்லை. தமிழ்நாட்டை ஏமாற்றும் எண்ணம்தான் உள்ளது. இவர்கள் ஏற்கனவே நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை அறிமுகம், மாநில உரிமைகளை பறித்தல், கவர்னரை வைத்து சட்டங்களுக்கு அனுமதி

மறுத்தல் உள்ளிட்ட பல செயல்பாடுகளில் ஒன்றிய அரசு, தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. அதே வஞ்சகத்துடன் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதியை நிறுத்தி வைத்துள்ளது.

இதன் மூலம் தமிழ்நாட்டு மக்கள் பயந்து கொண்டு ஆதரவு தருவார்கள் என்று மத்திய அரசு அரசியல் செய்கிறது. ஆனால் தமிழக முதல்வர் நாம் நம்முடைய நிதியை கொண்டு செயல்படுத்துவோம் என்று திட்டவட்டமாக உள்ளார். ஏற்கனவே கல்வி நிதி கொடுக்காமல் ஏமாற்றி வரும் மத்திய அரசிற்கு மாற்றாக, தமிழக நிதியை கொண்டு கல்வி பணியை மிகச் சிறப்பா

க தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். இதேபோன்று மத்திய அரசு எவ்வளவு வஞ்சித்தாலும், அதை தாண்டி மக்களுக்கான பணிகளை திராவிட மாடல் முதல்வர் சிறப்பாக முன்னெடுத்து செல்வார் என்று போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் பழைய பேருந்துகளுக்கு மாற்றாக புதிய பேருந்துகளை வழங்கியும், புதிய சிஎன்சி மாடல் பேருந்துகளை பல இடங்களில் அறிமுகப்படுத்தியும், நவீன இயந்திரங்கள் மூலம் டிக்கெட்டுகளை வழங்கியும், ஜிபே உள்ளிட்ட நவீன சாதனங்களின் மூலமாகவும், போக்குவரத்துறை மிகச் சிறப்பாக தமிழ்நாடு முதல்வர் தலைமையில் செயல்பட்டு வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

error: Content is protected !!