Skip to content

சீனாவில் கராத்தே போட்டி…. 2ம் பிடித்து கரூர் மாணவர் சாதனை…. சிறப்பான வரவேற்பு..

கரூர் மாவட்டம் மண்மங்களத்தை அடுத்த பண்டுதகாரன் புதூரைச் சார்ந்தவர் தமிழ் செல்வன். இவரது மகன் சஞ்ஜீவ் (வயது 13). அருகில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளாக தனது தந்தையிடம் கராத்தே கற்று வந்த நிலையில், கடந்த 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை சீனாவில் உள்ள கியாஞ்சின் என்ற இடத்தில் உலகளாவிய கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவில் இருந்து 6 பேர் மட்டுமே பங்கேற்றனர். 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் சஞ்ஜீவ் மட்டுமே கலந்து கொண்டு

(குமுத்தே) சண்டை பிரிவில் கஜகஸ்தான், சீனா, ரஷ்யா மாணவர்களை எதிர் கொண்டு சண்டையிட்டதில் நூலிலையில் தோற்று முதல் பரிசை தவற விட்டு, 2ம் பரிசை வென்றார். கட்டாப் பிரிவில் 3ம் இடம் பிடித்தார். கராத்தே சண்டை பிரிவில் இந்தியாவில் இதுவரை வெற்றி பெறாத நிலையில் இச்சிறுவன் முதன் முதலாக வெற்றி பெற்று இந்தியாவிற்கும், கரூருக்கும் பெருமை சேர்த்து இருப்பதாக அச்சிறுவனின் தந்தை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!