Skip to content

திருச்சி உலகநாதபுரம் முத்து மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா..

திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் உலகநாதபுரத்தில் முத்து மாரியம்மன் கோயில் மற்றும் செல்வ விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் 73 ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழா மே 7 ஆம் தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அன்றையதினம் இரவு 7 மணிக்கு, முத்துமாரியம்மன் கோயிலிலிருந்து குதிரை வாகனத்தில் புறப்பட்டு வாண வேடிக்கை, தாரை தப்பட்டை மற்றும் முளைப்பாறியுடன் வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்வு இரவு 8 மணிக்கு நடைபெற்றது.
முக்கிய நி்கழ்வான தேரோட்டம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வையொட்டி இரவு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து உற்சவ

அம்மன் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளி, கல்லுக்குழி என்.எம்.கே காலனி வழியாக மேள வாத்தியம், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கையுடன் வீதி உலா வந்து உலகநாதபுரம் கோயில் வளாகத்தை வந்தடைந்தது. இதில் அப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்து அம்மன் அருள் பெற்றனர்.
தொடர்ந்து சனிக்கிழமை காலை 7 மணிக்கு காவிரி ஆறு, அய்யாளம்மன் படித்துறை மேல சிந்தாமணியில் இருந்து அலகு குத்தியும், காவடி, பால்குடம் காவடிகள் மற்றும் அக்னி சட்டிகள் எடுத்து வந்து உலகநாதபுரம் அம்மன் சன்னதியை அடைந்து, பால் அபிஷேகம் நடைபெறுகிறது. 11 மணிக்கு அன்னதானம் நிகழ்ச்சியும், 12 மணிக்கு அம்மனுக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை (மே 11 ஆம் தேதி) காலை 8:30 மணிக்கு சுத்த பூஜையும், 12 மணிக்கு சுமார் 2000 பேருக்கு மகா அன்னதானமும், மதியம் 3 மணிக்கு மாவிளக்கு பூஜையும், மாலை 6 மணிக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இத்துடன் விழா நிறைவு பெறுகிறது. 1திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு முத்து மாரியம்மன் கோயில் வளாகத்தில் இன்னிசை கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்..

error: Content is protected !!