திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் உழவர் சந்தை பகுதியில் மாநில நிதிக்குழு ஊக்கநிதி மற்றும் மாநகராட்சியின் பொதுநிதித்திட்டத்தின் கீழ் ரூ.5.51 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிட்டிகிளப் மையத்தை
நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர்கே.என்.நேரு இன்று பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து வாழ்நாள் உறுப்பினராக பதிவு செய்தவர்களுக்கு அதற்கான ஆணையை வழங்கி உரையாற்றினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் , மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வே.சரவணன், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் மதுபாலன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் வீ.கோவிந்தராஜுலு, மங்கள் அண்டு மங்கள் மூக்கப்பிள்ளை,
சாமி பில்டர்ஸ் நிர்வாக இயக்குனர் இளமுருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.
இந்த விழாவில் மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன்,உதவி ஆணையர் சென்னு கிருஷ்ணன்,கவுன்சிலர்கள் பைஸ் அகமது, சுரேஷ்குமார்,
பொருளாளர் துரைராஜ்,மணிகண்டம் ஒன்றிய செயலாளர் மாத்தூர் கருப்பையா,முன்னாள் பகுதி செயலாளர் தில்லை நகர் கண்ணன்,மாநகர அயலக அணி அமைப்பாளர் துபேல் அகமது, துறையூர் ராஜேந்திரன்,
வட்டச் செயலாளர்கள் வாமடம் சுரேஷ், அம்ஜத் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண்:8 பகுதியில் மாநகராட்சியின் பொதுநிதித்திட்டத்தின் கீழ் ரூ.43.80 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன சமுதாய கழிப்பிடக் கட்டடத்தை இன்று பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

