Skip to content

டாஸ்மாக் பாரில் மோதல்… ரவுடி கைது…. திருச்சி க்ரைம்

டாஸ்மாக் பாரில் மோதல் -தகராறு… ரவுடி கைது

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை கம்பி கேட் அருகாமையில் உள்ள டாஸ்மாக் பாரில் மது பிரியர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர் .அப்போது மேலகல்கண்டார்கோட்டை அர்ஜுனன் நகர்
மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்கிற முஹம்மது ரஃபீக் (வயது 38, ) திருச்சி கீழ கல்கண்டார் கோட்டை
ஆனந்த் ஆகியோருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது தற்போது உறையூர் சோமு
பிள்ளை தெரு பகுதியைச் சேர்ந்த புகழ் (வயது 26) என்பவர் தட்டி கேட்டார் இதனால் ஆத்திரமடைந்த சிவகுமாரும், ஆனந்தும் சேர்ந்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது .இதுகுறித்து புகழ் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொன்மலை போலீசார் ரவுடி சிவக்குமாரை கைது செய்தனர் .மேலும் ஆனந்தை தேடி வருகின்றனர்

காதலிக்க மறுத்த பெண்ணின் அண்ணன் மீது தாக்குதல்

திருச்சி அரியமங்கலம், மலையப்பநகர் அண்ணா தெரு பகுதியைச் சேர்ந்தவர் அமுல்ராஜ் (வயது 32. )
இவரின் மூத்த சகோதரியை மண்ணச்சநல்லூர் அக்ரஹாரம் வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் ரமேஷ் காதலித்து வந்தார். ஆனால் அவரது காதலை அந்தப் பெண் ஏற்றுக் கொள்ளவில்லை .இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் தனது சகோதரர் சிவக்குமார் மற்றும் சந்தோஷ் குமார் ஆகியோருடன் சேர்ந்து அமுல்ராஜ் வீட்டுக்கு சென்றனர். பின்னர் அந்த பெண்ணிடம் தகராறு செய்த போது அமுல்ராஜ் தட்டி கேட்டார். ஆத்திரமடைந்த ரமேஷ் உள்ளிட்ட மூன்று பேரும் சேர்ந்து அவரை இரும்பு ராடால் தாக்கினர்.
இதில் அவரது உதட்டில் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து அமுல்ராஜ் அரியமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரமேஷ், சிவக்குமார், சந்தோஷ்குமார் ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.

மதுவுக்கு அடிமையான புரோட்டா மாஸ்டர் உள்பட 2 பேர் பரிதாப சாவு

திருச்சி பழைய கரூர் ரோடு கீழ சிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் கோபி (வயது 29). இவர் சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு டிபன் கடையில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
மதுவுக்கு அடிமையான இவர் சிந்தாமணி அண்ணா சிலை அருகே மயங்கி கிடந்தார் பின்னர் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் டாக்டர்கள் பரிசோதித்து விட்டு கோபி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதை போன்று திருச்சி வண்ணாரப்பேட்டை திருவிக நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் (29 ). மதுவுக்கு அடிமையான இவர் கடந்த ஒரு வாரமாக அளவுக்கு அதிகமாக மது அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் வீடு திரும்பி அவர் திடீரென உயிரிழந்தார் .இது குறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற ரவுடி கைது

திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவ வீரர் காலனி 8 -வது தெரு பகுதியில் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் அருகாமையில் மேல கல்கண்டார்கோட்டை அர்ஜுனன் நகர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்கிற முகமது ரஃபீக் (38)என்பவர் கஞ்சா விற்பனை செய்வதாக பொன்மலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் ஹமீலா பானு மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர் .பின்னர் சிவகுமாரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இவர் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
பின்னர் சிவகுமாரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். அவரிடமிருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டது.
இதேபோன்று அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எஸ்.ஐ.டி மைதானம் கேட் பகுதியில் பள்ளி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்த அரியமங்கலம் கணபதி நகர் 3 -வது தெரு பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் மகள் ஜெயஸ்ரீ (21), திருச்சி பாலக்கரை எடத்தெரு பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (27 )ஆகிய இரண்டு பேரை அரியமங்கலம் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அரியமங்கலம் காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த அகல்யா (22) அரியமங்கலம் மலையப்பன் நகர் அண்ணா தெரு பகுதியைச் சேர்ந்த மதன் என்கிற குட்செட் மதன் (41) ஆகிய இரண்டு பேரை வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

error: Content is protected !!