Skip to content

திமுக போராட்டத்தால் ஓபிசி மருத்துவ மாணவர் 20ஆயிரம் பேர் பயன்- முதல்வர் பதிவு

அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கையில் திமுகவின் சட்டப்போராட்ட வெற்றியால் கடந்த 4 ஆண்டுகளில் ஒ.பி.சி ஒதுக்கீட்டில் 20,088 பேர் பயனடைந்துள்ளனர். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது,

சதிக்குக் கால் முளைத்துச் சாதியாகி உழைக்கும் மக்களை ஒடுக்கினாலும், விதி வலியது – இதுதான் நம் தலையில் எழுதியது எனச் சுருண்டுவிடாமல், போராடி பெறும் உரிமைகளால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் நமக்கான இடங்களை உறுதிசெய்கிறோம்!

சமூகநீதிக்கான இந்த அரசியலையும் – போராட்டத்தையும் நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். நம் விரல்களைக் கொண்டே நம் கண்களைக் குத்தும் வித்தையறிந்தவர்கள் செய்யும் சூழ்ச்சி அரசியலை முறியடிக்க, இந்நாளின் வரலாற்று முக்கியத்துவத்தை உரக்கச் சொல்வோம்! என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!