தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் 31-ம் தேதி முதல் செப்டம்பர் 10-ம் தேதி வரை இங்கிலாந்து, ஜெர்மனி நாடுகளுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்றுப்பயண விவரம் விரிவாக தயாரிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடு பயணத்தின்போது தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை முதல்வர் சந்திக்கிறார். இந்தச் சந்திப்புகளின் மூலம், தமிழகத்தில் உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், பொருளாதார வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்துவதற்கும் முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியில் உள்ள முன்னணி தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது லண்டன் தமிழ்ச்சங்கம் சார்பிலும் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இந்த சுற்றுப்பயணத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, டிஆர்பி ராஜா, தலைமை செயலாளர் முருகானந்தம் ஆகியோரும் உடன் செல்கிறார்கள்.