Skip to content

திருச்சியில் முதல்வர் ஸ்டாலின்…. உற்சாக வரவேற்பு

தஞ்சை நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  காலை 11 .15 மணி அளவில் திருச்சி வந்தார்.

விமான நிலையத்தில் முதல்வருக்கு அமைச்சர்கள் கே. என். நேரு, மகேஸ்,  மெய்யநாதன் , மேயர் அன்பழகன்,  கலெக்டர் பிரதீப் குமார், டில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், கல்யாணசுந்தரம் எம்பி, தாட்கோ தலைவர் மதிவாணன்,  சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி, தியாகராஜன் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார்,, பழனியாண்டி, முத்துராஜா,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, உள்ளிட்ட திமுக  நிர்வாகிகள், மகளிர் அணி, மாணவர் அணி, இளைஞர் அணி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிறப்பாக வரவேற்பு அளித்தனர். முதல்வரை பார்த்ததும் அவர்கள் வாழ்த்து முழக்கமிட்டனர்.ஏராளமானவர்கள்  முதல்வரிடம் மனுக்கள் கொடுத்தனர். அவற்றை முதல்வர் பெற்றுக்கொண்டார்.

தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதல்வர் அங்கிருந்து கார் மூலம் தஞ்சை புறப்பட்டு சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!