ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 127வது மலர் கண்காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்து மலர்களை பார்வையிட்டார். இன்று ( வெள்ளிக்கிழமை ) காலை முதல்வர் ஸ்டாலின், ஊட்டியில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது நிருபர்களிடம முதல்வர் கூறியதாவது:
2026 மட்டுமல்ல 2031, 2036ம் ஆண்டுகளிலும் தி.மு.க., ஆட்சி தான் தமிழகத்தில் இருக்கும். திராவிட மாடல் ஆட்சி தான் தமிழகத்தில் நிலைத்து நிற்கும். மக்கள் திராவிட மாடல் ஆட்சிக்கு அதிக ஆதரவளித்து வருகின்றனர்.
ஜனாதிபதி உச்சநீதிமன்றத்தில் கருத்து கேட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பிற மாநில முதல்வர்களுடன் கருத்து கேட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முதல்வர் கூறினார்.