நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் நாளை நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு வந்தது. அதை ஏற்று அவர் இன்று காலை விமானம் மூலம் டில்லி சென்றார். முதல்வரை, அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் வழியனுப்பி வைத்தனர்.
டில்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்திக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன்காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோரையும் சந்திப்பார் என தெரிகிறது.
