Skip to content

காதர்மொகிதீன் ஐயூஎம்எல் தலைவராக 3வது முறை தேர்வு, முதல்வர் வாழ்த்து

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய  தலைவராக 3வது முறையாக திருச்சி  காதர்மொகிதீன்  தேர்வாகி உள்ளார்.  அவருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது  X தளத்தில் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவராக மூன்றாவது முறையாக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மதிப்பிற்குரிய பேராசிரியர் காதர் மொகிதீன் ஐயா அவர்களுக்கு எனது வாழ்த்துகள்!. பண்பும் அரசியல் முதிர்ச்சியும் மதிக்கூர்மையும் பெற்ற பேராசிரியர் ஐயா அவர்களின் தலைமையில், இந்தியாவின் மதச்சார்பின்மையையும் மதநல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் IUML-ன் சீரிய மக்கள் பணி சிறக்கட்டும்!. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!