கோவை மாவட்டம், கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு பன்றிகள் விவசாய நிலங்களில் இரவில் புகுந்து சேதப்படுத்தி வருகிறது இதனால் விவசாயிகள் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டு இருந்தனர் இந்நிலையில் கேரளாவில் பன்றிகளை சுட்டுக் கொள்ள தனி சட்டம் கொண்டுவரப்பட்டது கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதை அடுத்து தமிழக அரசும் விவசாயிகள் நலன் கருதி தமிழகத்திலும் சட்டம் நிறைவேற்றப்பட்டது மாதம் ஒருமுறை வனத்துறையினர் விவசாயிகள் சந்திப்பு கூட்டம் நடத்தி வருகின்றனர் இந்நிலையில் கிணத்துக்கடவு அருகே கோதவாடி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதை அடுத்து

கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் பவன் குமார் அவர்களிடம் விவசாயிகள் மனு அளித்தனர் இதை அடுத்து வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் ஆனைமலை புலிகள் காப்பகம் கலை இயக்குனர் வெங்கடேஷ் அறிவுரைப்படி பொள்ளாச்சி வனச்சரகர் ஞானபால முருகன் தலைமையில் நேற்று கோதவாடி பகுதியில் உள்ள விவசாய நிலங்களை ஆய்வு செய்தனர் ஆனைமலை துணை கள இயக்குனர் தேவேந்திர குமார் அறிவுறுத்தலின்படி காட்டுப்பன்றிகளைப் பிடிக்க ஐந்து அடி உயரம் 600 கிலோ எடையுள்ள கூண்டு வைக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும் வனத்துறையினர் கூறுகையில் காட்டுப்பன்றிகளை பிடித்து ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிகளில் விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் மேலும் விவசாயிகள் இனி அச்சப்பட வேண்டியதில்லை என கூறினர் .

