Skip to content

கோவை-வீட்டிற்குள் நுழைய முயன்ற 6 அடி நீள பாம்பு… அதிர்ச்சி

கோவையில் குடியிருப்பு பகுதியில் வீட்டிற்குள் நுழைய முயன்ற சுமார் 6 அடி நீளம் கொண்ட சாரைப் பாம்பை கண்ட பெண் அச்சம் அடைந்து, விரட்ட முயன்ற கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கோவை, தடாகம் சாலையில், சக்தி முருகன் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் அருகே இன்று காலை 10 பத்து மணி அளவில் அங்கு இருந்த புதருக்குள் இருந்து வீடுகள் இருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் சாலையில் ஊர்ந்து வந்த பாம்பு, சிறிது தூரத்தில் அருகே இருந்த வீட்டிற்குள் செல்ல முயன்று கேட்டின் அருகே சென்றது. அதனைக் கண்ட ஒரு பெண் அச்சம் அடைந்து அதனை துரத்த முயன்றார். இந்நிலையில் வீட்டிற்குள் செல்லாமல்,

அப்படியே திரும்பிய அந்த சாரைப் பாம்பு, மீண்டும் அங்கும், இங்கும் சாலையில் சுற்றித் திரிந்தது. அதனை அங்கு இருந்த நபர் கல்லை எடுத்து அடிப்பதற்காக செல்லுகின்ற காட்சிகள், அருகே உள்ள வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்தக் காட்சிகள் தற்பொழுது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அங்கு உள்ள குடியிருப்பு பகுதியில் குழந்தைகளை விளையாட வெளியில் தனியாக செல்வதை தடுக்க வேண்டும், மேலும் இரவில் அப்பகுதியில் செல்லும் நபர்கள் கவனமுடன் செல்ல வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!