கோவை, பொள்ளாச்சி இருந்து திருச்சூர் செல்லும் வழியில் உள்ள திவான்சா புதூர் அருகே அப்பகுதியை சேர்ந்த பெண்மணி ஒருவர் சாலையில் செல்போன் பேசிக்கொண்டு நடந்து சென்றார் அப்போது KL09 M 5441 கேரளா பதிவு எண் கொண்ட இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்து விட்டு வேகமாக சென்று விட்டனர் அதே பகுதியில் மேலும் ஒரு பெண்மணியிடம் செயின்பறித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது அந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறதுஆனால் செயினை பறிகொடுத்த அந்த பெண்மணிக்கு சிறிதும் கவலையில்லை ஏனென்றால் அது கவரிங் நகை அதனால் போனால் போகட்டும் விடுங்க என்று தெரிவித்துள்ளார்
மேலும் ஆனைமலை பொள்ளாச்சி பகுதியில் தொடர்ந்து செயின் பருப்பில் இந்த வாகனத்தில் வரும் நபர்கள் ஈடுபட்டு வருவதாகவும் இவர்களை பிடிப்பதற்காக தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனைமலை போலீசார் தெரிவித்துள்ளனர் மேலும் தீபாவளி திருநாள் வருவது அடுத்து இருசக்கர வாகன செயின் திருடர்கள் கிராமத்துப் பெண்களிடம் நகைப் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட முயற்சி செய்து வருகின்றனர் என்பதும் டிஎஸ்பி பவித்ரா தலைமையில் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது ஆகும்.
