நாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தலைவர்,பிரதமர்,மாநில முதல்வர்கள் அரசு உயர் அதிகாரிகள் தேசிய கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் வஉசி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தேசிய கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்தினார்.அதனை தொடர்ந்து அலங்கார ஊர்தியில் சென்று காவல்துறை அணிவகுப்பை பார்வையிட்டு குழந்தைகளுடன் இணைந்து மூவண்ண பலூன்களை பறக்கவிட்டார்.பின்னர் காவல் துறை அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டார்.
இதில் கோவையில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர் 122 பேர், வருவாய் துறையினர் 34 பேர், பேராசிரியர்கள் 30 பேர், பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் 127 பேர் என 313 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது
மத்திய அரசின் பால்புரஸ்கார் விருது வென்ற உயிரிழந்த வியோமா பிரியா சிறுமியின் பெற்றோர்கள் பெற்றுக் கொண்டனர்.

