Skip to content

கோவை மாநகராட்சி கூட்டம்.. 144 தீர்மானங்கள் நிறைவேற்றம்

கோவை மாநகராட்சி கூட்டம் இன்று நடந்தது. மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் சிவ குரு பிரபாகரன் துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் தொடங்கியதும் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் தலைவர் நல்லகண்ணு மறைவிற்கு அஞ்சலி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது மேயர் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் அதிகாரிகள் மௌன அஞ்சலி செலுத்தினர்.

அதன் பிறகு கூட்டத்தில் 144 தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்காக கொண்டு வரப்பட்டது. அப்போது அ.தி.மு.க கவுன்சிலர் பிரபாகரன் எழுந்து இதற்கு ஆட்சேபம் தெரிவித்தார். இப்போது அவசர கூட்டம் நடத்துவது ஏன் ? 144 தீர்மானங்கள் கொண்டு வந்து உள்ளீர்கள் ? இந்த அவசரம் காட்டுவது ஏன் ? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு மேயர் ரங்கநாயகி தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதால் அதற்கு முன்பாக மக்களுக்கு தேவையான மாநகராட்சி பணிகளை நிறைவேற்ற வேண்டியது உள்ளது இன்று பதிலளித்தார்.

தொடர்ந்து கவுன்சிலர் பிரபாகரன் பேசியபோது

அதற்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் தி.மு.க கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ் ஷர்மிளா சந்திரசேகர் ஆகியோர் மாநகராட்சி கூட்டத்தை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

அப்போது பிரபாகரன் நிருபர்களிடம் கூறும் போது,

அவசர அவசரமாக 144 தீர்மானங்களை கொண்டு வந்து நிறைவேற்றுகிறார்கள். சாலைகள் போடுவதற்காக நிதி ஒதுக்குகிறார்கள். ஆனால் சாலைகள் தரமானதாக போடப்படவில்லை. இதில் கமிஷன் கை மாறுகிறது. அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

அதன் பிறகு தொடர்ந்து கூட்டம் நடந்தது. அப்போது கோவை மாநகராட்சி 4 மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளை பல சாலைகளில் பாதாள சாக்கடைகள் மற்றும் குடிநீர் குழாய்கள் பதிக்க தோண்டப்பட்ட உள்ளங்களால் சாலைகள் மிகவும் பழுதடைந்து உள்ளது. இதனால் போக்குவரத்திற்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே சாலைகளை பழுது நீக்கம் செய்து சீரமைக்க தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டம் மூலம் 24.108 கிலோ மீட்டருக்கு 12 கோடி மதிப்பிலும், 255.23 கிலோமீட்டர் நீளத்திற்கு 10605.99 லட்சம் மதிப்பீட்டிலும் சீரமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

error: Content is protected !!