Skip to content

கோவை-இரட்டை வானவில்- பிரமிக்க வைத்த அரிய நிகழ்வு

கோவையில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த நிலையில், இன்று மதியம் பெய்த திடீர் சாரல் மழை, மக்களுக்கு புத்துணர்ச்சி அளித்தது. மழையும் வெயிலும் மாறி, மாறி வந்த ஒரு சூழலில், இருகூர் பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு வானவில்கள் தோன்றி காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.
காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில், மதிய வேளையில் வானம் இருண்டு லேசான சாரல் மழை பெய்யத் தொடங்கியது. சிறிது நேரத்திலேயே மழை நின்று, மீண்டும் வெயில் எட்டிப் பார்த்தது. இந்த வானிலை மாற்றத்தின் போது, இருகூர் பகுதியில் வான்வெளியில் பிரகாசமான இரண்டு வானவில்கள் அருகருகே தோன்றின.
வழக்கமாக ஒரு வானவில் தோன்றுவதே அரிதான நிகழ்வாக இருக்கும் நிலையில், இரட்டை வானவில் தோன்றியதைக் கண்ட அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். பலர் தங்கள் கைபேசிகளில் இந்த அரிய காட்சியைக் பதிவு செய்தனர். இயற்கையின் இந்த வர்ணஜாலத்தை நேரில் கண்ட அனுபவம் மறக்க முடியாதது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். வானவில் தோன்றும் நிகழ்வு எப்போதுமே மனதிற்கு இன்பம் அளிப்பதாகும். குறிப்பாக இரட்டை வானவில்லின் தோற்றம், அங்கு குழுமியிருந்த அனைவரையும் இயற்கை எழிலில் மெய்மறக்கச் செய்தது.

error: Content is protected !!