கோவை தொண்டாமுத்தூர் அடுத்த நரசிபுரம் வெள்ளிமலை பட்டினம் பகுதியைச் சேர்ந்த சப்தகிரி வயது 90 வீட்டுக் அருகே பூ பறித்துக் கொண்டிருந்தார். அப்பகுதி வருகே வந்த காட்டு யானை அவரை தாக்கியதில் இரண்டு கால்களில் முடிவு ஏற்பட்டது. அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் காட்டு யானையை விரட்டி அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்
சென்றுள்ளனர். அதிகாலை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை அங்கும் இங்கும் சுற்றி திரிவதால் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடியது அப்பகுதியில் பரபரப்பரை ஏற்படுத்தியது. யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.