பிறவியிலேயே இரு கால் சிதைவு : 3 வயது சிறுவனுக்கு செயற்கை கால்கள் பொருத்தி அசத்திய அரசு மருத்துவமனை மருத்துவர்கள்..!
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுக்கா சொக்கனூர் கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார். இவரது மூன்று வயது குழந்தை ரிஸ்வந்த்துக்கு பிறவியிலேயே இரு கால்களும் சிதைந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்டு, அங்கு உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள எலும்பு முறிவு பிரிவில் அனுமதித்தனர். அவனது வலது கால் முட்டிக்கு கீழ் அகற்றப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் உடலியல் மற்றும் மறுவாழ்வு மருத்துவ சிகிச்சை பிரிவில் உள் நோயாளியாக
அனுமதித்து, செயற்கை உடல் பாகங்கள் தயாரிக்கும் நிலையத்தில் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறுவனுக்கு செயற்கை கால் நேர்த்தியான முறைப்படி அளவெடுத்து, செய்யப்பட்டு பொருத்தப்பட்டு உள்ளது.
மேலும் அந்த குழந்தைக்கு நடை பயிற்சி கொடுக்கப்பட்டு தற்பொழுது தனியாக நடக்கவும் , தன்னம்பிக்கை ஏற்படும் அளவிற்கு சிகிச்சைகள் உலக தரம் அளவில் கொடுக்கப்பட்டு உள்ளன.
கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த செயற்கை மூட்டுத் தொகுப்பின் கீழ் இதுவரை பயன் அடைந்தவர்களில் மூன்று வயது குழந்தை ரிஷ்வந்த் என்பது குறிப்பிடத்தக்கது.