கோவை மாநகரில் அதிவேகமாக இயங்கி வரும் தனியார் பேருந்துகள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வரும் நிலையில், இன்று கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள வெரட்டி ஹால் சாலையில் சென்று கொண்டு இருந்த தனியார் பேருந்து ஒன்று, முன்னாள் சென்ற டெக்டர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இருப்பினும், பேருந்தின் முன்பக்க கண்ணாடி நொறுங்கி சேதம் அடைந்தது.
அதிவேகமாக இயங்கும் தனியார் பேருந்துகளுக்கு பெயரளவுக்கு மட்டுமே சோதனைகளை செய்து வழக்கு பதிவு செய்வதாகவும், தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு ஆதரவாக காவல் துறையினர் செயல்படுவதாகவும், அவர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.
மேலும், விபத்தை வீடியோவாக பதிவு செய்த பொதுமக்களை, தனியார் பேருந்து ஊழியர்கள் மிரட்டி உள்ளனர். எதற்காக பதிவு செய்கிறீர்கள், நீங்கள் யார் ? இதை பதிவு செய்ய? இதையெல்லாம் பதிவு செய்யக் கூடாது என்று அவர்கள் மிரட்டல் விடுத்து உள்ளனர், அசுர வேகத்தில் இயக்கி ஏற்பட்ட விபத்து வெளியே தெரிந்துவிடும் என்று பேருந்து மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் இதனால் இழப்பு ஏற்படும் என்பதால் நடந்த சம்பவத்தை மூடி மறைக்க, அவர்கள் வீடியோ எடுப்பதற்கு மிரட்டல் விடுத்து உள்ளார்.
இந்நிலையில் விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், பேருந்து ஓட்டுநருக்கு சாதகமாக செயல்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்த சம்பவம், கோவையில் அதிவேகமாக இயக்கப்படும் தனியார் பேருந்துகளுக்கு காவல்துறையினர் ஆதரவாக செயல்படுவது, பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தனியார் பேருந்துகளின் வேகத்தை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது. மேலும், விபத்து குறித்து முறையாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் அவர்கள் பயணம் பயனு உள்ளதாக அமையும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
