கோவை, தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தோட்டங்களில் தொடர்ந்து மின்சார வயர்கள், மோட்டர்கள், இரும்பு கம்பிகள் போன்ற பொருள்கள் தொடர்ந்து திருடப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து தோட்டத்துக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தும் வனவிலங்குகள் மற்றும் மின்சாதன பொருட்களை திருடும் நபர்கள் மீது கண்காணித்து வனத்துறை மற்றும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த குமார் என்று ராஜ்குமார் என்பவர் தோட்டத்தில் புகுந்த வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அதிகாலை 3 மணிக்கு தோட்டத்தில் மோட்டருக்கு பொருத்தப்பட்டு இருந்த வயர்கள் போன்ற மின்சாதன பொருட்களை திருடிக்
கொண்டு இருப்பதை கண்ட விவசாயி குமார் மற்றும் தோட்டத் தொழிலாளியுடன் அவரை மடக்கி பிடித்து, இதுகுறித்து தொண்டாமுத்தூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற தொண்டாமுத்தூர் காவல் துறையினர் அந்த வட மாநில வாலிபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகாலை விவசாய நிலத்திற்குள் புகுந்து மின்சாதன பொருட்களை திருடிய வடமாநில நபரும் மடக்கிப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.