கோழி பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
கோவை மாவட்டம் சுல்தான்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் தனியார் நிறுவனம் முட்டை கோழி பண்ணை அமைக்கும் வேலை நடைபெற்று வருகிறது.இதனால் விவசாயிகளுக்கு பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டு சுகாதார சீர்கேடு,ஈக்கள்,கொசு தொல்லை,துர்நாற்றம்,நிலத்தில் நீர் பிரச்சினை,நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோழிப்பண்ணைக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்று பலமுறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் தற்போது வரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தனிநபர் பண்ணிக்க தொழில் செய்வதற்காக அப்பகுதியில் வசியக்கூடிய விவசாயிகள் மற்றும் கிராம பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என கூறி 50-க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மாவட்ட அதிகாரிகளை சந்திக்க காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.மேலும் இதற்கு தீர்வு கிடைக்காவிட்டால் தொடர்ச்சியாக காத்திருப்பு போராட்டத்தில் இருக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.