கோயம்புத்தூர் ரோட்ராக்ட் கிளப் ஆஃப் ஜிசிடி சார்பில் ஒரைக்கல்பாளையத்தில் கண் சிகிச்சை முகாம்
கோயம்புத்தூர் ரோட்ராக்ட் கிளப் ஆஃப் ஜிசிடி சார்பில், 28 டிசம்பர் 2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணிக்கு, யூனைடெட் ஹேன்ட்ஸ் யூத் வெல்ஃபேர் அசோசியேஷன் வளாகம், தபால் நிலையம் அருகில், ஒரைக்கல்பாளையம் பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கண் பராமரிப்பு மற்றும் கண் சிகிச்சை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த முகாம் சிகரம் அறக்கட்டளை, கோவை சங்கரா கண் மருத்துவமனை, கோவை மாவட்ட

பார்வையிழப்பு தடுப்புச் சங்கம், குளோபல் எஜுகேஷனல் சர்வீசஸ் மற்றும் மகிழ் அகாடமி ஆகிய அமைப்புகளின் இணைப்புடன் நடத்தப்பட்டது.
“Bringing Lives Back into Focus” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில், சிறப்பு மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு, முகாமில் பங்கேற்ற 89 பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்ட 8 பேருக்கு இலவசமாக கண் அறுவை சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு, மேல்சிகிச்சைக்காக அவர்கள் கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த முகாம், இழந்த பார்வையை மீட்டெடுக்க உதவும் ஒரு சிறந்த முயற்சியாக அமைந்ததாக முகாமில் பங்கேற்ற பொதுமக்கள் தெரிவித்தனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மிகச் சிறப்பாக மேற்கொண்டிருந்தனர்.

