Skip to content

கோவை குலுங்கியது.. இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு- போட்டோ ஆல்பம்

திமுக மேற்கு மண்டல இளைஞரணி மாநாடு, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த கணியூர் சுங்கச்சாவடி அருகே நேற்று மாலை நடைபெற்றது.

இம்மாநாட்டுக்கு திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின்

தலைமை வகித்து பேசியதாவது: “இம்மாநாட்டில் 16 கழக மாவட்டங்கள், 39 தொகுதிகளைச் சேர்ந்த 80 ஆயிரம் இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். உங்கள் எழுச்சியை பார்க்கும் போது,

‘வெஸ்ட்டில் திமுக பெஸ்ட்’ என இக்கூட்டம் நிரூபித்துக் காட்டும். முதல்வரின் ஆட்சி, அரசியல் நாட்டுக்கே வழிகாட்டுகிறது. நாட்டில் பாஜகவுக்கு எதிரான போரில், நம் தலைவரை தலைமை ஏற்க

மற்ற மாநில தலைவர்கள் வலியுறுத்துகின்றனர். ஆட்சியை பொறுத்தவரை ஏராளமான

திட்டங்களை தந்துள்ளார் என்று இவ்வாறு தெரிவித்தார். முன்னதாக, மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி வரவேற்றார். அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அந்தியூர் செல்வராஜ் எம்.பி

ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். பிரகாஷ் எம்.பி நன்றி கூறினர். இந்த இளைஞரணி

நிர்வாகிகள் சந்திப்பில் மக்கள் வௌ்ளத்தில் கோவைையே குலுங்கியது.

error: Content is protected !!