Skip to content

கோவை…தாளியூர் பகுதியில் காட்டுயானை உலா… பொதுமக்கள் அச்சம்

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், பன்னிமடை, மடத்தூர், தாளியூர், வீரபாண்டிபுதூர் ஆகிய பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு காணப்படுகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகளும் காட்டு பன்றிகளும் அடிக்கடி ஊருக்குள் நுழைந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.

வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணிகள் மேற்கொண்டாலும் அடிக்கடி வனவிலங்குகளால் சேதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று நள்ளிரவு சுமார் 12:45 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை தாளியூர் ஊருக்குள் உலாவி உள்ளது. பின்னர் அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

தற்பொழுது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் இரவு நேரங்களில் யானை ஊருக்குள் வருவதால் வெளியில் செல்வதற்கு அச்சமாக உள்ளதாகவும் வனத்துறை இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் விவசாயிகளும் வலியுறுத்தியுள்ளனர்.

error: Content is protected !!